விழுப்புரம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த அதிமுக நிர்வாகி பலி

893பார்த்தது
விழுப்புரம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த அதிமுக நிர்வாகி பலி
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளரான முருகதாஸ் (58), கடந்த 7-ம் தேதி மாலை மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி