திண்டிவனத்தில் பெண்ணின் வீட்டினுள் கஞ்சாவை வீசியவர்கள் கைது

63பார்த்தது
திண்டிவனத்தில் பெண்ணின் வீட்டினுள் கஞ்சாவை வீசியவர்கள் கைது
திண்டிவனம் காணாவூர்பாட்டைச் சேர்ந்த சந்திரிகா (35), இடைத்தரகர் நாகராஜிடம் வீட்டுமனைக்காக ரூ.2 லட்சம் கொடுத்தார். அவர் ஏமாற்றியதால் சந்திரிகா பணத்தைத் திரும்பக் கேட்டார். ஆத்திரமடைந்த நாகராஜ், நண்பர்கள் காத்திக் (32), உமாபதி ஜெகன் (38) ஆகியோருடன் 250 கிராம் கஞ்சாவை சந்திரிகாவின் வீட்டிற்குள் வீசி, போலீசில் பொய்யான புகார் கொடுத்தார். திண்டிவனம் போலீசார் கஞ்சாவைக் கண்டெடுத்து விசாரணையில் உண்மை தெரிந்து, நாகராஜ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி