செஞ்சி அருகே ஸ்கூட்டி மீது பைக் மோதி சி. ஏ மாணவி பரிதாப பலி

58பார்த்தது
செஞ்சி அருகே ஸ்கூட்டி மீது பைக் மோதி சி. ஏ மாணவி பரிதாப பலி
ஆந்திர மாநிலம், நல்லூரைச் சேர்ந்தவர் ஜலாமுடி மீரா பாபு மகள் ஸ்ரீதேவி, 21; இவர், சென்னையில் தங்கி சி.ஏ., படித்து வந்தார். நேற்று முன்தினம் ஸ்ரீதேவியும், அவரது நண்பரான திருவள்ளூரைச் சேர்ந்த சங்கர், 22, என்பவரும் திருவண்ணாமலைக்கு பைக்கில் வந்தனர். மாலை 7:00 மணியளவில் செஞ்சி அடுத்த தொட்டியூர் கூட்டுரோடு அருகே வந்தபோது, வடபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி கீதா, 34, ஓட்டி வந்த ஸ்கூட்டி மீது பைக் மோதியது. ஸ்ரீதேவி, கீதா, அவரது மகள் யாழினி, 8, படுகாயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி ஸ்ரீதேவி நேற்று அதிகாலை இறந்தார். செஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி