விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கல்லடி குப்பம் கிராமத்தில் வசிக்கும் பாஜக பிரமுகரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான ஏழுமலைக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை வேளச்சேரி, கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், மற்றும் அவரது சொந்த கிராமமான கல்லடி குப்பம், செஞ்சியில் உள்ள திரையரங்கு, திருமண மண்டபம், அவரது மகன் ஆனந்தராஜுக்கு சொந்தமான அலுவலகம் ஆகியவற்றிலும் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.