செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியிலிருந்து 357 சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி, செஞ்சி அருகே பெட்ரோல் பங்க் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. செங்கல்பட்டு மார்க்கத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற லாரியும், திருவண்ணாமலை மார்க்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. காரில் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீதேவி குடும்பத்தினர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். செஞ்சி போலீசார் போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினர் சிலிண்டர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.