மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு

698பார்த்தது
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சிவலிங்கம் அவருக்கு பூரணகும்ப வரவேற்பு அளித்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். அங்கு துர்கா ஸ்டாலின் புற்று சாமியையும், மூலவர் அங்காளம்மனையும், உற்சவர் அங்காளம்மனையும் தரிசனம் செய்தார். சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து பிரார்த்தனை செய்து, பிரகாரத்தை வலம் வந்த பின்னர், அவர் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.