கரூர் மாவட்டம் சனப்பிராட்டியைச் சேர்ந்த 24 வயது லோகேஷ்குமார், செஞ்சியில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராகப் பணிபுரிந்து வந்தார். அடுத்த மாதம் 5-ம் தேதி இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு பணி முடிந்து ஊருக்குச் சென்றபோது, விழுப்புரம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் பைக் நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த லோகேஷ்குமார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.