திண்டிவனம் அருகே அரசு பேருந்து விபத்து.. 11 பேர் படுகாயம்

1119பார்த்தது
திண்டிவனம் அருகே அரசு பேருந்து விபத்து.. 11 பேர் படுகாயம்
திண்டிவனம்-சென்னை சாலையில், நேற்று (பிப்.21) சின்னசேலத்தில் இருந்து கிளம்பாக்கம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 11 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி