சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்து, திருநாவலூர் அருகே தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, பேருந்து இடதுபுறம் திரும்பி லாரி மீது மோதியது. இதில் பேருந்தில் பயணித்த 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருநாவலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.