செஞ்சி: அரசுப் பள்ளி ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

549பார்த்தது
செஞ்சி: அரசுப் பள்ளி ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மாத்தூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி கணித ஆசிரியர் ம.மேத்யூஸ் (50), விழுப்புரம் வி.பி.எஸ். கார்டனில் உள்ள வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் ஓய்வில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து விழுப்புரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி