கடலூர் மாவட்டம் மணவெளி நங்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவமணி (31) என்பவர், திண்டிவனம் அருகே சிங்கனூர் கிராமத்தில் சித்தி வீட்டில் தங்கி எம்.பி.ஏ. படித்தார். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கூலி வேலைக்குச் சென்றார். வேலை தேடியும் கிடைக்காததால் விரக்தியடைந்த அவர், கடந்த 28-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் செஞ்சிக் கோட்டை அருகே மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.