திண்டிவனத்தில் இஸ்லாமிய நினைவுச் சின்னங்கள் கண்காட்சி

713பார்த்தது
திண்டிவனத்தில் இஸ்லாமிய நினைவுச் சின்னங்கள் கண்காட்சி
திண்டிவனத்தில் அல் மதரஸத்துர் ரஹ்மானியாவின் 17ஆம் ஆண்டு விழா, அரபு பாடசாலை மற்றும் மாலை தனிப்பயிற்சியகம் சார்பில் இஸ்லாமிய நினைவுச் சின்னங்களின் கண்காட்சி மற்றும் ரமலான் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புது பள்ளிவாசல் தலைமை இமாம் எஸ்.ஏ. ஷேக் தாவூத் தலைமையேற்றார். மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் இமாம் ஹ. முஹம்மது ஜாவிது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இனாம் பள்ளிவாசல் இமாம் எஸ்.ஏ. ஷாஹுல் ஹமீது கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். பேராசிரியர் ஏ. அப்துல் ஸத்தார் சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி