விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே சகாதேவன் பேட்டையில் ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் சிவராஜ் தனது வீட்டில் சிறுத்தையை கண்டதாக வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தியதில் சிறுத்தை இருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர். இருப்பினும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.