விழுப்புரம்: நிதி நிறுவன ஊழியர்கள் கெடுபிடி தீக்குளித்த நபர் பலி

186பார்த்தது
விழுப்புரம்: நிதி நிறுவன ஊழியர்கள் கெடுபிடி தீக்குளித்த நபர் பலி
விழுப்புரம் மாவட்டம் பென்னைவளம் கிராமத்தைச் சேர்ந்த செங்கல் சூளை அதிபர் அப்பாஸ், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று பொக்லைன் இயந்திரம் வாங்கினார். தொழில் நஷ்டத்தால் தவணை செலுத்த முடியாத நிலையில், கடந்த 13-ஆம் தேதி இயந்திரத்தைப் பறிமுதல் செய்ய வந்த நிதி நிறுவன ஊழியர்கள் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த அப்பாஸ், தன் மீது எரிபொருளை ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். பலத்த காயங்களுடன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 12 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி