மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ‘மயான கொள்ளை’ விழா கோலாகலம்

502பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையூரில் உலகப் புகழ்பெற்ற அங்காளம்மன் கோயிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற மயான கொள்ளை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வாக, அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி ஊர்வலமாக மயானத்திற்கு சென்று, அங்கு பக்தர்கள் படைத்த காய்கறி, பழங்கள் உள்ளிட்ட படையல்களை ‘கொள்ளை’ கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் நோய்கள் நீங்கவும், தீய சக்திகள் அகலவும் வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தினர்.