மேல்மலையனுாரில் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறப்பு

68பார்த்தது
மேல்மலையனுாரில் புதிய போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் அதிகம் பக்தர்கள் வரும் ஆன்மீக ஸ்தலமாக மேல்மலையனூர் உள்ளது. இங்கு சாதாரண நாட்களில் 5,000 முதல் 10,000 பக்தர்களும், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். அமாவாசையன்று 2 முதல் 3 லட்சம் பக்தர்கள் வருகின்றனர். மாசி தேர் திருவிழாவின் போது 13 நாட்களுக்கு இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். 

இது போன்ற நாட்களில் பக்தர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், வீண் தகராறு, திருட்டு சம்பவங்கள் குறித்து புகார் செய்ய 7 கி.மீ. தொலைவில் உள்ள வளத்தி போலீஸ் நிலையம் சென்றே புகார் செய்ய வேண்டும். விழா நாட்களில் வரும் போலீஸ் உயரதிகாரிகள் தங்குவதற்கும் இங்கு இடம் இல்லை. எனவே பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பிற்காக மேல்மலையனூரில் போலீஸ் நிலையம் திறக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களும், பொதுமக்களும் கேட்டு வந்தனர். 

புதிய கட்டடம் கட்ட இடம் கிடைக்காமல் காவல் நிலையம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வளத்தி சாலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் குடியிருப்பிற்காக கட்டப்பட்டு பயன்படுத்தாமல் இருந்த கட்டடத்தில் புதிய போலீஸ் நிலையத்தை செஞ்சி டி.எஸ்.பி. கார்த்திகா பிரியா காவல் திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி