விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த குமரேசன், சில வாரங்களுக்கு முன்பு சாலை விபத்தில் படுகாயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று (10.11.2025) அதிகாலை அவர் உயிரிழந்தார். மேல்மலையனூரிலிருந்து செஞ்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.