செஞ்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

61பார்த்தது
செஞ்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
செஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பெண்கள் கண்ணிய மையம் சார்பில் சமூகத்தில் பாதிக்கப்பட்ட, வறுமையில் உள்ள குடும்பத்தினர் இழப்பீடு மற்றும் சமுக ஆதாரவை பெறுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தலைமை தாங்கினார். அதே கொம் நிறுவனர் சீனு பெருமாள் முன்னிலை வகித்தார். மைய ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ வரவேற்றார். 

சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சிறப்பு வருவாய் அலுவலர் கண்ணன், தொண்டு நிறுவன தலைவர் ஜான் வில்லியம்ஸ், மகளிர் அதிகாரமைய அலுவலர்கள் ராஜசேகரன், சந்தியா, சமூக நல விரிவாக்க அலுவலர் காமாட்சி, ஆதாரம் மைய ஒருங்கிணைப்பாளர் ஷில்பா ஆகியோர் பேசினர். குழந்தைகளுக்கான ஓவிய போட்டி நடத்தினர். குழந்தைகளுக்கும், மாணவிகளுக்கும் கல்வி உபகரணங்களையும், குடும்பங்களுக்கு உணவு பொருள் தொகுப்பையும் வழங்கினர். பெண்கள் கண்ணிய மைய தன்னார்வலர் சந்தியா நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி