செஞ்சி அருகே ஆலபூண்டி பகுதியில் பௌர்ணமி கிரிவலம் முடித்துவிட்டு சென்னை திரும்பிய வழக்கறிஞர் உள்ளிட்டோர் பயணித்த கார், எதிர்பாராதவிதமாக டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரக் கிணற்றில் விழுந்தது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த நான்கு பேரில் மூவர் உயிரிழந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் சுமார் மூன்று மணி நேரம் போராடி உடல்களை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.