மேல்மலையனூரில் திருடு போனசெல்போன்கள் உரியவர்களிடம்ஒப்படைப்பு

1பார்த்தது
மேல்மலையனூரில் திருடு போனசெல்போன்கள் உரியவர்களிடம்ஒப்படைப்பு
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை தினங்களில் காணாமல் போன 12 செல்போன்கள், உரியவர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ. கா. ப. அவர்களின் உத்தரவின்படி, செஞ்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ரமேஷ்ராஜ் மேற்பார்வையில், மேல்மலையனூர் காவல் ஆய்வாளர் திருமதி. வினதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி, காணாமல் போன செல்போன்களை மீட்டனர். செல்போன்களைப் பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி