மேல்மலையனூர் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் மாசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில் மயானக்கொள்ளை மற்றும் தீமிதி திருவிழாக்களுக்குப் பிறகு, 7-ஆம் நாள் நிகழ்வாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. தங்கக் கவச அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவ அம்மன், மகா தீபாராதனையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலிருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "அங்காளம்மா" முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.