எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க முடியாது என்றும், அவரிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் சி.வி.சண்முகம் ஏற்கனவே கட்சி நிர்வாகிகளிடம் உறுதியாகக் கூறிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நிலையில், சி.வி.சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.