விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் நாளையும் (மே 14, 15) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் அந்தமான கடல் பகுதிகளில் பருவமழை தொடங்கக் கூடும்.