விக்கிரவாண்டி அருகே குட்டையில் மூழ்கி தொழிலாளி சாவு

138பார்த்தது
விக்கிரவாண்டி அருகே குட்டையில் மூழ்கி தொழிலாளி சாவு
விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் (41) என்ற கூலித்தொழிலாளி, நேற்று இரவு மதுபோதையில் குட்டையில் கால் கழுவச் சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற விக்கிரவாண்டி காவல்துறையினர், ராமனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி