
விழுப்புரம்: பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி, எழும்பூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 2024-ல் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சிலம்பரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். காவல்குடியிருப்பில் வசித்து வந்த இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி மீது சந்தேகம் கொண்ட சிலம்பரசன் அவரைத் துன்புறுத்தி வந்துள்ளார். நேற்று மதுபோதையில் வந்த சிலம்பரசன், புவனேஷ்வரியை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதனால் விரக்தியடைந்த புவனேஷ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.






































