மயிலம் அருகே விபத்து 11 பேர் காயம்

79பார்த்தது
மயிலம் அருகே விபத்து 11 பேர் காயம்
கர்நாடக மாநிலம், பெங்களூரு கவேரி நகர் பிரதான சாலையைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி லாவண்யா (26). இவர், தனது உறவினர்கள் 11 பேருடன் வேனில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தென்பசியார் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், காயமடைந்த 12 பேரும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துகள் குறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி