திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் அரும்பட்டு ஆர்ச் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 34 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களைக் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராம்ஷா (42) என்பவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த குட்கா மற்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.