விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டு வைக்கப்பட்டதால் ரயில் இன்ஜின் சக்கரம் சேதமடைந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், தண்டவாளப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வடமாநிலத்தைச் சேர்ந்த 5 வாலிபர்கள் இரும்பு துண்டை வைத்ததும், மதுபோதையில் விளையாட்டாக அதைச் செய்து செல்போனில் புகைப்படம் எடுத்து ரீல்ஸ் பதிவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேடம்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.