சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புதுறை போலீசார் சோதனை.

3பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி அழகேசன் தலைமையிலான போலீசார் திடீரென சோதனை நடத்தினர். சோதனையின் போது, பத்திரப்பதிவுக்கு வந்தவர்களின் செல்போன்கள் மற்றும் ஆவணங்களை வாங்கிவிட்டு அலுவலகக் கதவை மூடி சோதனை செய்ததில், கணக்கில் வராத 2 லட்சத்து 330 ரூபாய் கைப்பற்றப்பட்டது. கணக்கில் வராத பணம் குறித்து துணை சார்பதிவாளர் நதியாவிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி