விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியிலுள்ள அரிசி அரைவை ஆலையில் இருந்த கொதிக்கலன் குழாய், மோட்டார், இரும்புக் குழாய்கள் உள்ளிட்ட பொருள்கள் கடந்த 19-ஆம் தேதி திருடுபோயின. இதுகுறித்து ஆலை மேலாளர் மா. கண்ணன் (47) அளித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், பார்ப்பனப்பட்டு பகுதியிலுள்ள பழைய இரும்புக் கடைக்கு கண்ணன் திங்கள்கிழமை சென்று பார்த்தபோது, அரிசி அரைவை ஆலையில் திருடப்பட்ட பொருள்கள் அங்கிருந்தது தெரியவந்தது. கடை உரிமையாளரிடம் விசாரித்தபோது, பொருள்களை விற்பனை செய்தவர் விக்கிரவாண்டி கே.கே. நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் அஜித்குமார் (29) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, விக்கிரவாண்டி போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.