விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வைரம்பேட்டை கிராமத்தில் ரகு என்பவர் தனது வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அங்கு வளர்க்கப்பட்ட 3 கஞ்சா செடிகளைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள ரகுவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.