கோவை விமானநிலையத்தில் தொண்டாமுத்தூர் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், எங்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை நானும் சி.வி சண்முகமும் முதலில் இருந்து கூறிவந்தோம். எங்களுக்கு சில கருத்துவேறுபாடு நிலவியது அது இப்போது சரியாகி விட்டது. பதவிக்காக வரவில்லை என சிவி சண்முகம் தெளிவாக கூறினார். நாங்களும் சிவி சண்முகமும் அண்ணன் தம்பி போல் பழகிவருகிறோம். இன்று காலை கூட அவருக்கு போன் செய்து ஊருக்கு கிளம்புகிறேன் என கூறிவிட்டுதான் வந்தேன். திமுகவை எதிர்பதால் தான் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தோம் என்று கூறினார்.