மயிலம் அடுத்த கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் டிசம்பர் 24 அன்று இரவு 9:00 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.