விழுப்புரம்: தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது.. ராமதாஸ்

129பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். தலைமை தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, திரும்பத் திரும்ப தவறு செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். அன்புமணி உள்ளிட்டோர் வன்னியர் சங்கத்தை பிரித்து, தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடுத்து குழப்புவதாகவும், ஊடகங்கள் அன்புமணி வெற்றியை முதலில் ஒளிபரப்பி பின்னர் திருத்தியது தர்மத்திற்கு எதிரானது என்றும் கூறினார். நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் செயலைக் கண்டித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி