மயிலம் அருகே செண்டூர் மின்வாரி அலுவலகம் எதிரே சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செண்டூர் பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பைக்கில் பயணிக்கும் போது திடீரென வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர தடுப்புக் கட்டையில் மோதினர். அதன் தாக்கத்தில் பைக் தீப்பற்றி எரிந்தது. பின்னர் தீயணைப்பு துறையினர் மூலம் எரிந்த இரு சக்கர வாகனத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். அதிர்ஷ்டவசமாக மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.