மின் இணைப்பிற்கு 4000 லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளர் கைது

216பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, வீட்டு மின் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்ட மின்வாரிய ஆய்வாளர் ரேகா, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஹரிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை ரேகாவிடம் கொடுத்தபோது போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி