விழுப்புரம் மாவட்டம், மயிலம் பொறியியல் கல்லூரியில் அனைத்து துறை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருநாள் புத்தாக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. புத்தாக்க பயிற்சியாளர் பெங்களூருவைச் சேர்ந்த வின் யூவர் வீக்னஸ் நிறுவனத் தலைவர் ஜெகன், மாணவர்களிடம் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் எளிய முறையில் செயல்விளக்கத்துடன் சிறப்புரையாற்றினார். கல்லூரியில் மாணவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், வாழ்வில் முன்னேற்றத்திற்கான வழிகள் பற்றியும் கூறினார்.
முன்னதாக, கல்விக்குழுமத் தலைவர் செந்தில் வரவேற்றார். முதல்வர் ராஜப்பன் வாழ்த்துரை வழங்கினார். இந்த பயிற்சியில் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஏற்பாடுகளைக் கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் முனைவர் சுந்தரமூர்த்தி, துணைப் பேராசிரியர் பாலாஜி ஆகியோர் செய்தனர்.