மயிலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது

213பார்த்தது
மயிலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
மயிலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமையில் நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகனா, ரமா பிரபா ஆகியோர் முன்னிலை வகித்த இக்கூட்டத்தில், ஒன்றியக் குழு துணைத் தலைவர் புனிதா ராமஜெயம், உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி