திண்டிவனம்: ஆம்னி பேருந்து மோதி டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

735பார்த்தது
திண்டிவனம் அடுத்த டி. கேணிப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, உழவு பணிக்காகச் சென்ற விவசாய டிராக்டர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக டிராக்டர் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்தை ஏற்படுத்திய பேருந்தில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்து மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்.