மயிலம் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

55பார்த்தது
மயிலம் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை
மயிலம் முருகன் கோவிலில் நேற்று (ஜூன் 1) வளர்பிறை சஷ்டி பூஜை நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவில் வைகாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. பின், 11:00 மணிக்கு பாலாபிஷேகத்தைத் தொடர்ந்து, மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் 1:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி