விக்கிரவாண்டி அருகே புகையிலை விற்பனை: இருவர் கைது

280பார்த்தது
விக்கிரவாண்டி அருகே புகையிலை விற்பனை: இருவர் கைது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த அசோகபுரி மற்றும் டி. எடையார் பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குமுதா (40) மற்றும் ரவிச்சந்திரன் (58) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அசோகபுரியில் 37 புகையிலை பாக்கெட்டுகளும், டி. எடையாரில் 366 புகையிலை பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி