தவெக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏக்கள் அணிக்கு அமைச்சர் பதவி வழங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்ப்பால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் இல்லை என தவெக தரப்பில் உறுதி அளித்ததாக திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இந்த திடீர் திருப்பம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.