வீடூர் அணையிலிருந்து விவசாயப் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணையில் 31 அடி நீர் இருப்புள்ள நிலையில், விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆரணி எம்.பி. தரணிவேந்தன், ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். இன்று முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை 135 நாட்களுக்கு இந்த தண்ணீர் திறக்கப்படும். இதனால் விழுப்புரம் மாவட்டத்தின் 2200 ஏக்கர் மற்றும் புதுச்சேரியின் 1000 ஏக்கர் என மொத்தம் 3200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 328.560 மில்லியன் கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
