கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை எடுத்த களமருதூர் ஊராட்சி பகுதியில் காலை முதல் மிதமான மழை பெய்து வருவதால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தென் மண்டல வானிலை ஆராய்ச்சி மையம், சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.