சங்கராபுரம்: மகன் தாக்கியதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தை பலி

643பார்த்தது
சங்கராபுரம்: மகன் தாக்கியதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தை பலி
சங்கராபுரம் அருகே, குடிப்பழக்கத்திற்கு அடிமையான தேவராஜ் (45) என்பவர் குடிபோதையில் மனைவியை தாக்கியுள்ளார். இதை தட்டிக் கேட்ட அவரது மகன் விஷ்வா (21) தந்தையை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த தேவராஜ் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கராபுரம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விஷ்வாவைத் தேடி வருகின்றனர்.