1000 ஆண்டுகள் பழமையான சோழர் கால முருகன் சிற்பம் கண்டெடுப்பு.

0பார்த்தது
1000 ஆண்டுகள் பழமையான சோழர் கால முருகன் சிற்பம் கண்டெடுப்பு.
விழுப்புரம் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் கோ. செங்குட்டுவன் மேற்கொண்ட கள ஆய்வில், கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த (1000 ஆண்டுகள் பழமையான) அரிய சோழர் கால முருகன் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன், சக்தி ஆயுதம் மற்றும் அட்ச மாலை ஏந்திய நிலையில் காணப்படும் இச்சிற்பம் தனித்துவமானது. தற்போது அப்பகுதி மக்களால் பெண் தெய்வமாக வழிபடப்பட்டு வரும் நிலையில், இது முருகன் சிற்பம் என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி