திண்டிவனம்: டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்து

519பார்த்தது
திண்டிவனம்: டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்து
திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையத்தைச் சேர்ந்த 18 பேர் வேனில் சென்னை வடபழனிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, திண்டிவனம் அருகே வேனின் பின்பக்க டயர் வெடித்ததில் வேன் கவிழ்ந்து கோபால்சாமி, காமாட்சி உட்பட 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி