திண்டிவனம்: விசிக பிரமுகருக்கு 2 ஆண்டு சிறை

701பார்த்தது
திண்டிவனம்: விசிக பிரமுகருக்கு 2 ஆண்டு சிறை
திண்டிவனத்தில் கடந்த மார்ச் 14, 2023 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வி.சி.க. பிரமுகர் தென்னரசு, அரசு பேருந்தின் கண்ணாடியை கல்வீசி உடைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக திண்டிவனம் கூடுதல் மாவட்ட குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. நீதிபதி ஹேமந்திர குமார், அரசு பேருந்தின் கண்ணாடியை கல்வீசி உடைத்த குற்றத்திற்காக தென்னரசுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Job Suitcase

Jobs near you