விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விழுக்கம் ஏரிக்கரை பகுதியில் ரோஷணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து சோதனை செய்தனர். விசாரணையில், அவர்கள் திண்டிவனம் மலையம்பட்டைச் சேர்ந்த பாலாஜி (31) மற்றும் சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த கோபி (23) என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.