திண்டிவனத்தில் நவம்பர் 22 அன்றுமாபெரும் வேலைவாய்ப்புமுகாம்

3பார்த்தது
திண்டிவனத்தில் நவம்பர் 22 அன்றுமாபெரும் வேலைவாய்ப்புமுகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், நவம்பர் 22, 2025 (சனிக்கிழமை) அன்று திண்டிவனத்தில் உள்ள புளித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர்திறன் திருவிழா நடைபெறுகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 18 முதல் 40 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம் வரை கல்வித் தகுதி பெற்ற ஆண், பெண் இளைஞர்கள் பங்கேற்கலாம். கல்விச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், புகைப்படங்களுடன் வருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், இ. ஆ. ப தெரிவித்துள்ளார்.